இலினாய்ஸ் மாநிலத்தில் புனித பேட்டரி திருவிழாவை முன்னிட்டு பச்சை நிறமாக ஜொலிக்கும் சிகாகோ நதி.
அமெரிக்க நாட்டின் இலினாய்ஸ் மாநிலத்தில் ஆண்டு தோறும் மார்ச் 17ஆம் தேதி புனித பேட்டரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையில் பச்சை நிற ஆடை அணிந்து மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந் நிகழ்ச்சிக்காக சிகாகோ நதியில் பெரிய படகுகள் மூலம் பச்சை நிற சாயம் கலக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த சாயம் நதியை ஏழு நாட்கள் வரை பச்சை நிறமாகி வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் 1967 ஆம் ஆண்டு முதல் நதிக்கு சாயம் பூசுவது நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பினால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது