Categories
அரசியல் மாநில செய்திகள்

இது நல்ல சட்டம்…! தமிழகம் சூப்பரா போட்டு இருக்கு…. பாராட்டிய ஒன்றிய அரசு ?

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  2006இல் அப்போதைய தமிழக அரசு நிறைவேற்றிய நுழைவுத்தேர்வு ஒழிப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு துறை,  அந்த ஒப்புதலில் குறிப்பிட்டுள்ள  மிக முக்கியமான கருத்துக்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கது. நுழைவுத்தேர்வு இரத்து செய்யப்படுவது உயர்கல்வி தரத்தை குறைக்காது.

பிளஸ் டூ தேர்வுகள் மிகவும் நேர்மையானவை,  வெளிப்படைத்தன்மையானவை. ஒவ்வொரு மாநிலமும் வெளிப்படையான, நேர்மையான மாணவர் சேர்க்கை நடைமுறையை வகுத்துக்கொள்ள ஆட்சேபனை இல்லை. இதை கூறியது தமிழ்நாடு அரசு அல்ல. ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை. அது மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசின் நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவு ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வு துறைக்கும் போயிருக்கு.

இந்த துறையின் கீழ்தான் இப்பொழுது சொல்லப்படுகின்ற நீட் தேர்வு வருகிறது. அந்த ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை நுழைவுத் தேர்வினை ஒலிக்கும்,  அன்றைய தமிழ்நாடு அரசு சட்டம் முன்வடிவிற்க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தது. ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை,  மக்கள் நல்வாழ்வுத்துறை, சட்டத்துறை அனைத்தும் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்து பிறகுதான்,

குடியரசுத் தலைவர் 2006ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வை ஒலிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அந்த சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றம் போனாங்க. சென்னை உயர் நீதிமன்றம் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழ்நாடு அரசு நுழைவுத்தேர்வு ஒழிப்பு சட்டம் ஒரு சமூக நலன் சார்ந்த சட்டம். சமூக நீதி அடைய இது தேவை என்று சொல்லி இருக்கு.

அது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் இட் இஸ் ஏ சோஷல் வெல்பர் லேஜிஸ்டேஷன்  டு பிக் ஜோசியல் ஜஸ்டிஸ் சொசைட்டி சென்று அந்த அமர்வில் இருந்த நீதியரசர்கள் மிஸ்ரா,  சம்பத்குமார் ஆகியோர் தீர்பளித்ததை இங்கேநான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அப்படிப்பட்ட நிலை  மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கையில் தமிழ்நாட்டில் சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது. அதாவது +12 மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவ கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியும் சேர்த்துக் கொண்டிருந்தோம் என தெரிவித்தார்.

Categories

Tech |