பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய பரிந்துரை மேற்கொள்ளப் போவதாக தடுப்பூசி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் ஸ்வீடனின் அஸ்ட்ரா ஜனகா இணைந்து தயாரித்த தடுப்பூசி பிரிட்டனில் உள்ள மில்லியன் கணக்கான மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசி பெரியவர்களுக்கு நல்ல பயன் அளிக்கக் கூடியது என்பதற்கு எந்த ஆவணமும் நிரூபிக்கப்படாத நிலையில்,இந்த தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருந்தது.
ஆனால், தடுப்பூசி திட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, பிரிட்டனை விட பின்தங்கி இருக்கிறது. இதனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தங்கள் முடிவை மாற்றி திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜெர்மனியில் உள்ள 65 வயது மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்துவதில் புதிய பரிந்துரை மேற்கொள்ளப் போவதாக தடுப்பூசி குழுவின் தலைவர் கூறியுள்ளார்.