Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது நல்ல ஸ்கோர்ன்னு தான் நினைச்சேன்!… ஆனா இனி அந்த மனநிலையை மாற்றணும்!… ரோகித் சர்மா பேச்சு….!!!!

ஆசியகோப்பை டி20 தொடரில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுபோட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றியடைந்தது. போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது “இப்போட்டி எங்களுக்கு சிறந்தபாடத்தை அளித்திருக்கிறது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன்கள் அடித்தால் அது நல்ல ஸ்கோர் என்ற மனநிலையிலிருந்து மாற வேண்டும். இது அழுத்தம்நிறைந்த போட்டி என எங்களுக்கு தெரியும். பாகிஸ்தான் அணி  வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கவேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் எங்களைவிட சிறப்பாக விளையாடினர்.

ரிஸ்வான் மற்றும் நவாஸ் கூட்டணியானது நீண்டநேரம் நீடித்து விட்டது. இவர்கள் இரண்டு பேரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் ஆசிப் அலியின் கேட்சை அர்ஷ்தீப்சிங் தவறவிட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, அழுத்தமான சூழ்நிலையின்போது யார் வேண்டுமானலும் தவறு செய்யலாம். மூத்தவீரர்களிடம், இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இது போன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |