கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்…. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக ஆட்சி பிடித்தது. தற்போது பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மாறி மாறி வார்த்தை போர் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
காங்கிரஸ் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி குதிரை பேரத்திற்கு இன்னொரு பெயர் காங்கிரஸ் என்று விமர்சித்தார். எங்கள் கட்சி எம்எல்ஏக்களை காங்கிரஸ் விலைக்கு வாங்கியது என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு காங்கிரசுடன் கூட்டணி வைத்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தபோது எங்கள் தார்மீகம் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது பழி சொல்ல வேண்டியது. இது நிரந்தரம் இல்லை எல்லாம் மாறிவிடும் என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.