Categories
பல்சுவை

இது பக்கத்துல மட்டும் போகாதீங்க…. உயிருக்கே ஆபத்து…. வெளியான சில தகவல்கள்…!!

நீங்கள் கடற்கரைக்கு அருகே சொல்லும் போது ஒரு திமிங்கலம் கரை ஒதுங்கி கிடந்தால் அதன் அருகில் செல்லக் கூடாது. திமிங்கலம் இறந்த பிறகு அதன் உடம்பிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற பல்வேறு வாயுக்கள் வெளியேறும். இந்நிலையில் திமிங்கலத்தின் தோல் மற்றும் தசைகள் மிகவும் கடினமாக இருப்பதால் அதன் வயிற்றில் இருந்து வாயுக்கள் வெளியேற வாய்ப்பில்லை.

மேலும் திமிங்கலத்தின் உள்ளுறுப்புகளும் திரவமாக மாறி அதிலிருந்து வாயுக்கள் வெளியேற ஆரம்பிக்கும். அப்படி இருக்கும்போது திமிங்கலம் அதன் சாதாரண உடல் அளவில் இருந்து இரண்டு மடங்கு பெரிதாக வாய்ப்பு உள்ளது. எனவே வாயுக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் திமிங்கலம் வெடித்துவிடும். அதனால்தான் திமிங்கலம் எங்கு கரை ஒதுங்குகிறதோ அங்கேயே அதனை புதைத்து விடுகின்றனர்.

Categories

Tech |