Categories
அரசியல் மாநில செய்திகள்

இது பச்சைப்பொய்…! நான் ஒரு சாமானியன்…. நீதிமன்றத்தில் சந்திப்பேன்…. அண்ணாமலை பதிலடி…!!!!!!

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அண்ணாமலையிடம் ரூபாய் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செய்தியாளரிடம் பேசிய அக்காட்சி எம்பி ஆர்.எஸ் பாரதி 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்புக் கோராவிடில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

சொந்த பணத்தை முதலீடு செய்ய ஸ்டாலின் துபாய் சென்றதாக அண்ணாமலை கூறியது பச்சைப் பொய். சட்ட நடவடிக்கைகளை தொடங்கினால் அண்ணாமலை தாங்க மாட்டார் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, ரூ. 100 கோடி கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. என்னைப்போன்ற சாமானியர்களை துபாய் குடும்பத்துக்கு இணையாக பார்க்கிறார்கள். எல்லா அச்சுறுத்தல்களையும் நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |