பிரான்சில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
பிரான்சில் அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் மருத்துவ கவுன்சில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறித்தியதாவது:- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அவரவர் குடும்பங்களை தாமாகவே தனிமைப்படுத்த விரும்புவர்கள் அவர்களது குழந்தைகளை வியாழன் வெள்ளி கிழமைகளில் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை வீட்டிலேயே தங்க வைக்கலாம் என்று கூறியுள்ளது.
மேலும் கொரோனா வைரசால் எளிதில் பாதிப்படையக் கூடிய வயதானவர்களை வீட்டிற்கு அழைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்பும் குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பள்ளியில் வாரக் கடைசி நாட்களில் விடுப்பு எடுக்கும் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்றும் கூறியுள்ளது. மேலும் பிரான்சின் பிரதமரான ஜீன் கேஸ்டெக்ஸ், மருத்துவ கவுன்சிலின் அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.