Categories
மாநில செய்திகள்

இது பற்றி அவதூறு பரப்பாதீங்க அண்ணமலை…. தமிழக காவல்துறை வேண்டுகோள்…..!!!!!

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பொய் செய்திகளை பரப்பவேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இருப்பதாவது “பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பிவருகிறார்.

புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, குறிப்பாக வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு மேற்கொள்ளும் முன்பே அது என்ன.? என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். அத்துடன் இவ்வழக்கை தாமதமாக NIA-விற்கு அனுப்பியதாக கூறுகிறார். ஆகவே உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி தமிழக காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.

Categories

Tech |