Categories
தேசிய செய்திகள்

இது புதுசா இருக்கே… திருப்பதியில் இதுவரை நடக்காத விஷயம்… பாடம் படிக்கும் அதிகாரிகள்…!!!

திருப்பதி கோயிலின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ள அரசு அதிகாரிகள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தேவஸ்தானத்தின் தலைவராக பதவி ஒய்.வீ. சுப்பா ரெட்டி பதவி வகித்து வருகிறார் செயல் அதிகாரியாக ஜவகர் ரெட்டி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர அரசு அதிகாரிகளிடம் திருமலைக்குச் சென்று தேவஸ்தானத்தின் செயல்பாடுகள் குறித்து கற்றுத் தெரிந்து கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சதா பார்கவி தலைமையில் நேற்று முக்கிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நன்கொடை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் அதிகாரிகளுக்கு தேவஸ்தானத்தின் கணக்குகளை எவ்வாறு சரி பார்ப்பது, வரவு-செலவு விஷயங்களை பதிவு செய்வது, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பாடம் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டம் நன்கொடை துறை அதிகாரிகளுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போன்ற நடைமுறைகள் மற்ற கோவில்களிலும் செயல்படுத்துமாறு திட்டங்கள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை திருமலையில் பிரம்மோற்சவ விழா தொடங்க இருக்கிறது. இந்த விழா ஒன்பது நாட்கள் வரை நடைபெறும் இதையொட்டி வரும் 11ஆம் தேதி நடக்கவிருக்கும் கருட சேவையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்கிறார். மேலும் அவர் அலிபிரி நடைபாதையும் திறந்துவைக்கிறார். பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் சேவை எனப்படும் தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |