சீனாவில் ஒரு பெண் தண்டனையிலிருந்து தப்பிக்க தொடர்ந்து கர்ப்பமடைந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள கிழக்கு ஜியாங்சு என்ற மாகாணத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த 2011-ம் வருடத்தில் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதற்காக சுமார் 9 வருடங்களுக்கும் அதிகமாக சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சமயத்தில் அவர் கர்ப்பமடைந்திருந்தார். எனவே அவருக்கு சிறைக்கு வெளியில் தண்டனை வழங்கப்பட்டது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் பிரசவ காலம் முடிவடைந்த பின் தொடர்ந்து கர்ப்பமடைந்து வந்திருக்கிறார். இதனால் அதிக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்த போதும் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படாமல் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இம்முறை அவர் கர்ப்பமடைய தாமதம் ஏற்பட்டதால், வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். தற்போது அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் “நான் இதுபோன்ற தவறை செய்திருக்க கூடாது, அதற்காக மிகுந்த வேதனையடைகிறேன், சட்ட விரோதமான செயல்களை செய்து நிறைய குழந்தைகளை பெற்றிருக்ககூடாது, அது பொறுப்பற்ற செயல்” என தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் செய்த குற்றங்களிற்காக சுமார் 10 வருடங்களுக்கும் அதிகமாக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.