சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆரி, “சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு தரும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் எனும் போர்வையில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம் ராஜகோபாலன் போன்றோருக்கு சட்டப்படி எடுக்கும் நடவடிக்கை இது போன்றோருக்கு பாடமாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.