சென்னையில் மக்கள் தொகை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் தனது குடும்பத்துடன் லவ் டுடே படத்தை பார்க்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கே பார்த்தாலும் ஊழலின் இலக்கணமாக அமைச்சர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் வெளியாக உள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி வாங்குகிறார்கள்.
விளம்பர முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இது போன்ற மோசமான ஆட்சியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. விலை உயர்வு விளைவு உயர்வு இதுதான் திமுக அரசின் தாரக மந்திரமாக உள்ளது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.