இந்தியா உட்பட எட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டாவது நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அங்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனா அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்த்தான், உஸ்பெகீஸ்தான் தலைவர்களுடன் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். மேலும் பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியது இதுவே முதல் தடவை ஆகும். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி இருவரும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் பிராந்திய விஷயங்கள் உலகளாவிய பிரச்சினைகள் பற்றியும் அவர்கள் விவாதம் நடத்தியுள்ளனர். அப்போது ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியபோது கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் பெரும் சவால்களை மேற்கொண்டு வருகின்றது.
இந்த தருணத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும் உலகளாவிய பொருளாதாரத்திற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் சுமார் 30 சதவீதம் பங்களிப்பு செய்கின்றது. உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் இந்த அமைப்பில் இடம்பெற்று இருக்கின்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையே மிக பெரும் ஒத்துழைப்பிற்கும் பரஸ்பர நம்பிக்கைக்கும் இந்தியா ஆதரவளிக்கின்றது. இந்த நிலையில் நமது பிராந்தியத்தில் நம்பகமான மீள் தன்மையுடைய பலதரப்பட்ட விநியோக சங்கிலிகளை மேம்படுத்துவதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சிறப்பான இணைப்பு தேவைப்படுகின்றது. மேலும் நாம் ஒருவருக்கொருவர் சரக்கு போக்குவரத்துக்கான முழு உரிமையை கொடுப்பது மிகவும் அவசியமாகும். நாங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக ஆக்குவதில் முன்னேற்றம் கண்டு வருகின்றோம். இந்த வருடம் இந்தியா ஏழரை சதவிகித பொருளாதார வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கின்றோம். இது உலகின் முன்னணி பொருளாதார வளர்ச்சியில் ஒன்றாகும். இந்த நிலையில் இந்தியாவில் தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இருக்கிறது. அவற்றில் 100 நிறுவனங்கள் யூனிகான் நிறுவனங்களாகும். எங்கள் அனுபவம் பிற உறுப்பு நாடுகளுக்கு பயன் அளிக்கத்தக்கதாகும்.
இதற்காக நாங்கள் எங்கள் அனுபவத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் புதிய சிறப்பு பணி குழுவை உருவாக்கவும் தயாராக இருக்கின்றோம். இன்று உலகம் மற்றொரு முக்கியமான சவாலை எதிர்கொண்டு வருகிறது அது நமது மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வதாகும். இந்த பிரச்சனைக்கு சாத்தியமாகிற ஒரு சிறுதானிய வகை பயிரிடுவதையும் அவற்றை பயன்படுத்துவதையும் அதிகரிப்பதாகும். மேலும் சிறுதானிய வகைகள் மிகச் சிறப்பான உணவுகளாக பல்லாயிரக்கணக்கான வருடங்களாக சாகுபடி செய்யக்கூடியவையாக விளங்குகிறது. இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளில் மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் கலாச்சாரமாக சத்தான உணவு நெருக்கடியை கையாள்வதில் மலிவு விலை மாற்றாக அமைந்திருக்கிறது. 2023 ஆம் வருடம் ஐநா சர்வதேச சிறுதானிய உணவு வருடமாக கொண்டாடப்பட இருக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நாம் சிறுதானிய உணவு திருவிழா நடத்துவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். இந்த நிலையில் இந்தியா இன்றைக்கு மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவுக்கு குறைந்த செலவில் செல்லக்கூடிய இடமாக அமைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் குஜராத்தில் பாரம்பரிய மருந்திற்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையம் தொடங்கப்பட்டது. இது பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் முதல் மற்றும் ஒற்றை மையமாகும். நாம் பாரம்பரிய மருத்துவத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். இதற்காக புதிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பணிக்குழுவை உருவாக்க இந்தியா முயற்சி மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் பதவியை வரும் ஆண்டில் இந்தியா ஏற்பதற்கு ரஷ்ய அதிபர் புதினும் சீன அதிபர் ஜின்பிங்கும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.