Categories
உலக செய்திகள்

“இது போரை மேலும் நீட்டிக்கும்”… ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை…!!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால்  இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்தி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் புதன் கூறியதாவது, போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. மேலும் விரைவாக போர் முடிவுக்கு கொண்டு வரும் என்பதை உறுதிப்படுத்தவே நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஆனால் எல்லா மோதல்களும் ஏதோ ஒரு வகையில் அல்லது பேச்சுவார்த்தையில் முடிவடைகிறது. நம்முடைய எதிரிகள் எவ்வளவு வேகமாக புரிந்து கொள்கின்றார்களோ அவ்வளவு வேகமாக மோதல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோபைடன்  உக்ரைனுக்கு சுமார் 1.8 பில்லியன் டாலர் அளவில் ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து எச்சரிக்கை விடுத்த புதின் கூறியதாவது, இது போரை மேலும் நீட்டிக்க செய்யும். எங்களை எதிர்ப்பவர்கள் இது ஒரு தற்காப்பு ஆயுதம் என கூறுகின்றார்கள். ஆனால் எப்போதும் ஒரு மாற்று மருந்து இருக்கும். இதை செய்பவர்கள் வீணாகப் போரை நீட்டிக்க தான் செய்கின்றார்கள் என கூறியுள்ளார்.

Categories

Tech |