Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது போலீசுக்கு தெரிஞ்சும் கண்டுக்கல… இப்போ இப்படி வந்து முடிஞ்சிருச்சு… திண்டுக்கல்லில் கொடூர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே கஞ்சா வியாபாரியை தொழில் போட்டி காரணமாக கழுத்தை அறுத்து கிணற்றில் வீசி சென்ற கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துரை அருகே அரண்மனைக்காரர் கிணறு பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று ரத்தக்கறை பல்வேறு இடங்களில் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சின்னாளப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் அங்குள்ள கிணற்றில் துணிகள் மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வசித்து வந்த கஞ்சா வியாபாரியான ராஜபாண்டி அந்தக் கிணற்றுக்குள் கொலைசெய்து வீசப்பட்டது தெரியவந்தது. அதன்பின் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரது உடலை மேலே கொண்டு வந்தனர். ராஜபாண்டி கைகள் கட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு உடலில் கல்லை கட்டி கிணற்றில் மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரியவந்தது.

பெரும்பாலும் இப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இதனால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமாராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. கஞ்சா விற்பதற்காக வியாபாரிகள் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வந்து சென்றுள்ளனர். இதனால் வியாபாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தெரிந்தும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போது கொலையில் முடிந்துள்ளது. கஞ்சா வியாபாரியை கொலை செய்து கிணற்றில் வீசி சென்ற கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |