Categories
உலக செய்திகள்

“இது ப்ளோரிடாவிற்கு ஏற்பட்டு நெருக்கடி அல்ல. அமெரிக்காவிற்கு ஏற்பட்ட நெருக்கடி”… அமெரிக்க ஜனாதிபதி கருத்து…!!!!

ப்ளோரிடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை தாக்கிய மிக சக்தி வாய்ந்த புயல்களில் ஒன்றான இயான் புயல் தாக்கியதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் அதிகரித்துள்ளது. அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அந்த நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது இந்த நிலையில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா எனும் கடற்கரை பகுதி அருகே  இயான் சூறாவளிப்புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரையை கடந்துள்ளது. இதனால் மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசி உள்ளது.

ப்ளோரிடாவை சூறையாடிச் சென்ற இந்த புயல் தெற்கு கரோலினா கடற்கரையில் இரண்டாவது முறையாக நேற்று முன் தினம் கரையை கடந்துள்ளது. மேலும் தீவிர வலுடன் தாக்கிய இந்த புயலால் உயிர்பிழத்தவர்களை மீட்பு பணியினர்கள் தேடி வருகின்றார்கள். ஃப்ளோரிடாவில் சனிக்கிழமை இரவு 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு உள்ளனர். லீ மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக பதிவாகி இருக்கிறது. மேலும் மாவட்ட வாரியாக உயிரிழப்புகள் இன்னும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் புயலால் பாதித்த இடங்களை பார்வையிட்டு பேரழிவை ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோபேடன் இந்த வாரத்தின் பிற்பகுதியில் ப்ளோரிடா செல்கின்றார். பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் திங்கள்கிழமை அன்று  போர்ட்டோ ரிக்கோவிற்கு செல்வார்கள் புதன்கிழமை ப்ளோரிடாவிற்கு செல்கின்றார்கள் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. மேலும் இது பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது தேச வரலாற்றில் மிக மோசம் என்ற அளவிலான தரவரிசையில் இந்த சூறாவளி புயல் இடம்பெறும் எனவும் அந்த நாட்டை கட்டமைக்க சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட ஆகும் இது ப்ளோரிடாவிற்கு ஏற்பட்ட நெருக்கடி எல்லாம் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட நெருக்கடி என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |