Categories
மாநில செய்திகள்

இது மட்டும்தான் திமுக-வின் கொள்கை…. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி ஸ்பீச்…..!!!!

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது ” “தாங்கள் வலுவாக இருப்பதை பார்த்து பயம் கொண்டதால், அதிமுக உடைந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க பொதுக் குழுவில் முதல்வர், மேளத்திற்கு இருபக்கமும் அடி என்பதுபோல தனது நிலைமை இருக்கிறது என பேசினார்.

இதுவரையிலும் எந்த முதல்வரும், எந்த காலகட்டத்திலும் பேசாததை அவர் பேசியிருக்கிறார். ஏனெனில் முதல்வர் ஸ்டாலின் மனம் வெதும்பி பேசி இருக்கிறார். தன் நிர்வாக திறன் குறைபாட்டை கூறுகிறாரா? (அல்லது) கட்சியின் நிர்வாகிகளை குறிப்பிடுகிறாரா? என தெரியாத அளவுக்கு பயத்துடன் பேசி இருக்கிறார். அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட மைத்ரேயன் இதுவரையிலும் அ.தி.மு.க-வுக்காக எந்தஒரு செயலையும் செய்தது கிடையாது.

தி.மு.க-வை எதிர்ப்பது மட்டுமே அதிமுக-வின் கொள்கையாகும். வேறு எந்த கொள்கையும் அதிமுக-வுக்கு இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். திமுக மக்களுக்காக கொடுத்த திட்டங்கள் அனைத்தும் குறுகியகால நலத்திட்டங்கள் மட்டும்தான். தன் குடும்ப உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டுவருவது மட்டும்தான் திமுக-வின் கொள்கை ஆகும். இதனிடையில் அதிமுக, எம்ஜிஆர் வகுத்துதந்த கொள்கையில் சரியாக சென்று கொண்டுள்ளது” என்று அவர் பேசினார்.

Categories

Tech |