அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை திருவொற்றியூரில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் தீபாவளி பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சரத்குமார் பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கிய பிறகு மேடையில் பேசினார் அப்போது அரசியல் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல. சேவை செய்வதற்காகவும் தான் அரசியல்.
நாங்கள் தொண்டு சேவை உதவி செய்து கொண்டிருந்த காலகட்டங்களில் தற்போது இருக்கும் வசதிகளை போல செல்போன், வீடியோ கேமராக்கள் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அன்றைக்கு நான் தான் சிஎம் என்று கூறியுள்ளார்.