Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது மட்டும் செஞ்சிட்டா… ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்… சவால்…!!!

டெஸ்ட் போட்டியில் புஜாராவை கிண்டலடித்து தமிழக வீரர் அஸ்வின் மீசையை எடுத்துக்கொள்வதாக சவால் விடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வின், “இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை புஜாரா மட்டும் கிரீசை விட்டு மேலேறி வந்து தூக்கி அடித்து விட்டால் என் ஒரு பக்க மீசையை மழித்துக் கொள்கிறேன்” என கிண்டலாக சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை புஜாரா ஏற்க தயாரா என்றும் கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |