Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது மாதிரி இனி கொண்டு வர முடியுமா..? இந்த முடிவை கைவிடுங்க… மண்சோறு சாப்பிட்டு வேட்பாளர் போராட்டம்..!!

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காரைக்குடியில் சிமெண்டு சாலையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து மண் சோறு சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே கேட் அருகே உள்ள சாலையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் கையில் கொண்டு வந்த தயிர் சாதத்தை தரையில் கொட்டினார். அதன் பின் அந்த மண் சோறை சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;- 70 ஆண்டு காலமாக காரைக்குடி ரயில்வே பகுதியில் போடப்பட்ட சிமெண்ட் சாலை எந்தவித சேதமும் இல்லாமல் நல்ல தரத்தில் இன்றுவரை உள்ளது.

ஆனால் இப்போது போடப்படும் சாலைகள் சில மாதங்களிலேயே சேதமடைந்து விடுகின்றன. இந்த சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் செயல்பட உள்ளதால் சாலையை பெயர்த்தெடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது போன்ற தரமான சாலையை இந்த சாலையை பெயர் தடுத்தால் போட முடியுமா ? திட்ட பணியை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும். மேலும் இந்த முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |