கனடாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், கொரோனாவின் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடாவிலுள்ள ஒன்ராறியோ என்ற பகுதியில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்தவில்லை எனில் அது கொரோனாவின் மூன்றாம் அலை உருவாக நேரிடலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வெளியான வரைபடங்கள் மற்றும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி மாத தொடக்கத்தில் வாரம் ஒன்றுக்கு ஒரு லட்சம் நபர்களில் 5 பேருக்கு பாதிப்பு இருந்தது. தற்போது மார்ச் மாத ஆரம்பத்தில் இருந்தே ஒரு லட்சம் நபர்களுக்கு 20 என்று அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் இதற்கு முன்பு பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருக்கிறது. எனவே தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை இதனால் சமமாகியுள்ளது. இது குறித்து அறிவியல் ஆலோசனை குழுவின் இணைத் தலைவர் Adalsteinn Brown என்பவர் கூறியுள்ளதாவது, இரு வெவ்வேறு வகையான கொள்ளை நோய்கள் ஒன்ராறியோவில் கண்டறியப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இதில் முதல் முதலில் ஆரம்பித்த கொரோனா வைரஸானது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்றும் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா தான் கட்டுப் படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.