வான்கூவர் நகரில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றில் நேற்று தீப்பற்றிய நிலையில் அந்த தீ குடியிருப்பு பகுதி ஒன்றிற்கும் பரவிவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனடா நாட்டில் வான்கூவர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் Mount Pleasant என்ற பகுதியில் நிர்வாணா என்னும் இந்திய உணவகம் ஒன்று இயங்கி வந்துள்ளது. அந்த உணவகத்தின் சமையலறையில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தாலும் அதற்குள் தீ அந்த உணவகத்தின் மேல் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி ஒன்றிற்கும் பரவிவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உடனடியாக 38க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தீயணைப்புப் படையின் தலைவரான Dan Nichols தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.