ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரில் வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த வெண் பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்து எரியும்போது 800 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பநிலை உருவாகும் என்பதால் மனிதர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்றும் போரில் இந்த குண்டுகளை பயன்படுத்துவது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் போபஸ்னா நகரங்களின் மீது வெண் பாஸ்பரஸ் குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்காக மனித உரிமை அமைப்புகள் மற்றும் உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளனர்.