நெல்லையில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல முயற்சிகளையும், விதிமுறைகளையும் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கிடையே பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முக கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் அரசாங்கம் வலியுறுத்தியது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரத்திலிருக்கும் நகர பஞ்சாயத்தின் செயல் அலுவலரான பிரபா தலைமை கொண்ட குழுக்கள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டது. அதில் முக கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.