தொழிலாளி ஒருவருக்கு கஷ்டமான நேரத்தில் லாட்டரி பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கைதாச்சல் கிராமத்தில் வசிப்பவர் ராஜன். இவர் ரப்பர் அறுக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது இவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. இதற்கு காரணம் தன் வீட்டின் பக்கத்தில் உள்ள முத்தப்பன் சாமி தான் என்று கூறியுள்ளார். இதனால் முத்தப்பன் கோயிலை பெரிதாக எடுத்துக் கட்டுவதற்கு தனக்கு விழுந்த பரிசுத் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வங்கியில் கடன் அதிகமாக இருந்ததால் அதை கட்ட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.
என்னுடைய வீட்டை கூட பறிமுதல் செய்ய வங்கியிலிருந்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சமயத்தில் தான் நான் லாட்டரி சீட்டை வாங்கினேன். என்னுடைய முத்தப்பன் அருளால் இக்கட்டான சூழலில் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. இந்த ஒற்றை லாட்டரியால் என்னுடைய வாழ்க்கை மாறிப் போனது என்று கூறியுள்ளார். ராஜனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது லாட்டரியில் இந்த பணத்தை வைத்து வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்துள்ளார்.