மதுரையிலிருக்கும் அல்லிகுண்டம் மலைப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே அல்லிகுண்டம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது கோடைகால சூழ்நிலை நிகழ்வதால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் அல்லிகுண்டம் மலைப்பகுதியிலிருக்கும் நாணல் புற்கள் அனைத்தும் காய்ந்து சருகாகியுள்ளது.
இந்நிலையில் அம்மலைப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் காய்ந்த நாணல் புற்கள் மூலம் காட்டுத்தீ மலை முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியிலிருக்கும் அனைத்து மரங்களும் காட்டுத் தீயில் எரிந்து நாசமாகியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் அத்தீயை அணைக்க முன்வரவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.