நெல்லையில் முதியவர் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 70 வயதான பூமாலை வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த பூமாலை அதே பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர் தொட்டியின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலையில் ஈடுபடப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டையிலுள்ள காவல் நிலையத்திலும், தீயணைப்பு துறையிலும் தகவல் கொடுத்துள்ளார்கள். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மேல்நிலை நீர் தொட்டியின் மேலே ஏறி பூமாலையை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் பூமாலைக்கு ஆறுதல் வார்த்தை கூறி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்கள்.