Categories
சினிமா தமிழ் சினிமா

” இது மோசமான நாட்கள், கெட்ட நேரம்”…. உயிர் தப்பிய நடிகை ரம்பா வேதனை…..!!!!!

நடிகை ரம்பாவின் கார் விபத்துக்கு உள்ளானது. இதில் ரம்பாவும், அவரது மகளும் காயங்களுடன் உயிர்தப்பி இருக்கின்றனர். தற்போது ரம்பாவின் இளையமகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக ரம்பா கூறியதாவது “பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் போகும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதி விட்டது. இவ்விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர்தப்பினேன்.

நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். இதற்கிடையில் நானும் என் ஆயாவும் சிறுகாயங்களுடன் சிகிச்சை முடிந்து மீண்டு விட்டோம். ஆனால் என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து தொடர்பாக  “மோசமான நாட்கள் கெட்ட நேரம்” என வேதனையுடன் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

 

Categories

Tech |