ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இ. முத்துலிங்காபுரம் ரயில் பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க நீல நிறம் சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி ரயில்வே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.