சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே பெரியார் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் மூதாட்டியின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.