ரோட்டின் ஓரம் கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம். சுப்பையாபுரம் சாலை ஓரத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தினம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு கிடைத்த மண்டைஓடுகள் எலும்புக்கூடுகளை சேகரித்து தடவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த நபர் யார்? எப்படி இறந்தார் . யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.