ஆற்றங்கரையில் கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி கொள்ளிடம் ஆற்றங்கரையில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.