Categories
பல்சுவை

இது யாருக்காவது தெரியுமா?…. சிறிய முதலீட்டில் 40 லட்சம் ரூபாய் வரை வருமானம்…. போஸ்ட் ஆபீஸ் சிறப்பு திட்டம்….!!!!

நீங்கள் நல்ல வருமானம் சம்பாதிக்க பல திட்டங்கள் உள்ளது. அதில் எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் வருமானம் சம்பாதிக்க தபால் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அது நல்ல வருமானம் தருபவையாகவும் உள்ளன. இதில் சிறு சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பெரும்பாலான மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. PPF திட்டத்தில் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்தால் 40 லட்சம் ரூபாய் மேல் சம்பாதிக்க முடியும். அதாவது தினமும் 417 ரூபாய் என்றால் மாதத்திற்கு 12,500 ரூபாய் முதலீடு.

ஆகவே ஒரு ஆண்டுக்கு மொத்தம் 1.5 லட்சம் ரூபாய். இந்தத் திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் ரூபாய் என்றால் மொத்தம் 22.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம். தற்போது இந்த திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. கூட்டு வட்டியின் பலன் மூலம் வட்டி வருமானம் மட்டுமே 18.18 லட்சம் ரூபாய் கிடைக்கும். நாம் மொத்தமாக முதலீடு செய்த தொகை 22.50 லட்சம் ரூபாய். வட்டி வருமானம் மூலமாக கிடைப்பது 18.18 லட்சம் ரூபாய். மெச்சூரிட்டியின் போது மொத்தமாக நமது கையில் கிடைப்பது 40.68 லட்சம் ரூபாய்.உங்கள் தேவைக்கு ஏற்றவாறு முதலீடு தொகையை கூட்டி அல்லது குறைத்து லாபம் சம்பாதிக்க முடியும்.

Categories

Tech |