Categories
சினிமா தமிழ் சினிமா

இது யாருக்கும் நடக்கலாம்… பிளீஸ் பாதுகாப்பாக இருங்க… பிரியா பவானி சங்கர் டுவீட்…!!!

கொரோனா மரணங்கள் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபகாலமாகவே கொரோனாவால் திரைத்துறையினர் பலரும் உயிரிழந்து வரும் சூழலில் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது மனைவி சிந்து இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சிந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ரொம்ப வருத்தமளிக்கிறது . ஒவ்வொரு தொடங்கும் வாழ்வை இழக்கும் சோகமான செய்தி என்னவென்றால் இது யாருக்கும் ஏற்படக்கூடும். நீங்கள், நான், என் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் யாரும்! ப்ளீஸ் பாதுகாப்பாக இருங்கள். இது ஒருபோதும் நடக்கக் கூடாது என நான் விரும்புகிறேன். அருண்ராஜா காமராஜூக்கு  பலத்தையும், தைரியத்தையும் அளிக்கும்படி கடவுளை வேண்டிக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |