Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இது யாருடைய பை..? டிக்கெட் சோதனையில் சிக்கிய இளைஞர்கள்… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை வேலூரிலிருந்து திருச்சி நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்தது. அந்த பேருந்தில் ஏழுமலை என்பவர் கண்டக்டர் பணியில் இருந்தார். வாசுதேவன் என்பவர் பேருந்தை ஓட்டி உள்ளார். அந்த பேருந்து திருமாந்துறை சுங்கச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் பேருந்தில் ஏறி பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார். அப்போது அந்த பேருந்தில் ஓரமாக பை ஒன்று இருந்தது. அது யாருடையது என்று டிக்கெட் பரிசோதகர் கேட்டார். அதற்கு ஒருவரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து டிக்கெட் பரிசோதகரும், கண்டக்டரும் அந்த பையை பிரித்து பார்த்தனர்.

அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மங்களமேடு காவல் நிலையத்திற்கு டிரைவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். அங்கு கஞ்சா இருந்த பை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகளிடம் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த முஜித் (34), செல்வம் (36) ஆகிய இருவரும் தான் 23 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது என்பது தெரிந்தது. இதுகுறித்து காவல்துறையினர் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |