Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது யாரு செஞ்ச வேலைன்னு தெரியல… அதிர்ச்சியில் உறைந்த வாக்காளர்கள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுரைக்காய்பட்டி வாக்குச்சாவடியில் பா.ம.க. சின்னம் மறைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடியை அடுத்த சுரைக்காய்பட்டியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமாவின் புகைப்படம், பெயர், சின்னம் ஆகியவை வாக்குப்பதிவு எந்திரத்தில் கருப்பு நிற ஸ்டிக்கர் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது. அதனை வாக்களிக்கச் சென்ற வாக்காளர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தேர்தல் நடத்தும் அலுவலருக்கு இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தேர்தல் அதிகாரிகள் சின்னத்தை மறைத்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கன்னிவாடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |