Categories
உலக செய்திகள்

இது ரொம்பவே டேஞ்சர்!!…. மீண்டும் சீனாவின் செயலால் நோய் பரவும் அபாயம்….. நிபுணர்கள் எச்சரிக்கை….!!!!!

பிரபல நாட்டில்  மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

பிரபல நாடான சீனாவில் உள்ள எசோவ்  நகரில் 20-க்கும் மேற்பட்ட  மாடிகளை  கொண்ட  அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு  மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில்  லட்சக்கணக்கில் பன்றிகள் வளர்க்கப்படுகிறது. மேலும் அதற்கு உணவு அளிப்பதற்காக 30 ஆயிரம் மையங்கள் உள்ளது. இந்நிலையில்  பன்றிகளின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கும் வகையில் கட்டிடத்தின் வெப்ப அளவை சீராக வைக்கவும், காற்றை சுத்திகரிக்கவும் மிக நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆண்டுக்கு 10 லட்சம் பன்றிகளை   மின்சார கருவிகள் மூலம் கொன்று அதன்  கறிகளை  விநியோகம் செய்யும் வசதியும் உள்ளது. இதன் கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு   உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் புதிதாக நோய்கள் பரவ வாய்ப்புள்ளது என மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |