உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது.
தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடு டிசம்பர் 31ம் தேதி முடிவடைவதையொட்டி, தளர்வுகள் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்கட்டமாக காலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரிட்டனில் உருவெடுத்துள்ள புதிய கொரோனாதொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த சூழலில்தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்தும், மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்தும் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டம் வாரியாக கொரோனா தொற்றை ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் தளர்வுகளை அறிவிப்பது திரையரங்குகளில் மேலும் பார்வையாளர்களை அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.