Categories
மாநில செய்திகள்

இது லிஸ்டுலயே இல்லையே… மாஸ் பிளான் போடும் சசிகலா டீம்…!!!

தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்பதற்கு தடபுடலான ஏற்பாடுகளை ஆதரவாளர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செய்யப்பட்டு கொரோனா தொற்று காரணமாக கர்நாடகாவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் ஏழாம் தேதிக்கு பதிலாக எட்டாம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு சசிகலா தமிழகம் வருகிறார் என பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சசிகலாவை வரவேற்க சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த திடீர் திருப்பத்திற்கு காரணம் சில முக்கிய அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும், சென்னை வரும் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் வரும் சசிகலாவுக்கு தடபுடலான வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகிவிட்டனர். இதற்கு பிள்ளையார் சுழியாக குடியாத்தம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி, சசிகலாவை ஏழாம் தேதி வரவேற்கவும், ஹெலிகாப்டரில் பறந்து அவர் மீது பூக்கள் தூவி வரவேற்கவும் அனுமதி வேண்டும் என்று வேலூர் ஆட்சியரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். இதனால் மற்ற அமமுக நிர்வாகிகள் புதிய திட்டங்கள் குறித்து யோசித்து வருகின்றனர்.

Categories

Tech |