Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது லிஸ்ட்லயே இல்லையே”… உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…? செம ஹேப்பியில் விளையாட்டு வீரர்கள்…!!!!!

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் அமைந்துள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் இன்று  வெகு சிறப்பாக தொடங்க உள்ளது. இன்று  தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இந்த போட்டியில் நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த 177 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் ஓட்டப்பந்தயம், செஸ், நீச்சல், கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து மற்றும் குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதற்காக இவர்களுக்கு கடந்த ஒரு மாதம் வண்டலூரில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கில்  விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருக்கும் மாணவ, மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, “நான் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல் நிகழ்ச்சியாக உங்கள் நிகழ்ச்சியில் கலந்து இருக்கின்றேன்.

உங்களை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் எந்தெந்த விளையாட்டுகளில் கலந்துகொண்டாலும் அதில் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் நீங்கள் என்னிடம் ஏதாவது கேட்க விரும்பினால் கேட்கலாம் அல்லது பேசலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து “ஒரு மாணவர் எங்கள் பள்ளியில் சரியான விளையாட்டு மைதானம் இல்லை. அதற்கு நீங்கள் விளையாட்டு மைதானம் உருவாக்கித் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கண்டிப்பாக அதற்கான முயற்சியை எடுப்பேன்.

மேலும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என கூறியிருந்தோம். அதனை தொடர்ந்து என்னுடைய முதல் பேட்டியில் இதை நான் கூறியுள்ளேன். அதனால் கண்டிப்பாக ஸ்டேடியம்  அமைத்து தர போராடுவேன்” என கூறியுள்ளார். இதனைதொடர்ந்து  மற்றொரு மாணவி “எங்கள் பள்ளியில் விளையாட்டு நேரத்தில் வேறு பாடம் நடத்துகின்றனர் என கூறியுள்ளார். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக முதலமைச்சரிடம் கூடி அதிகாரிகளுடன் கலந்து பேசி தீர்க்கப்படும்”. நீங்கள் இவ்வளவு ஆர்வத்துடன் கேள்வி கேட்பது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது என அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |