தேனியில் பொதுமக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போடி நகராட்சியிலிருக்கும் 16 வது வார்டில் மழைப்பொழிவின் காரணமாக அப்பகுதியிலிருக்கும் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டனர். இதற்கிடையே அந்தப் பகுதியிலிருக்கும் பொதுமக்கள் அனைவரும் கழிவுநீர் செல்லும் கால்வாய் பகுதியை சுத்தப்படுத்த வேண்டுமென்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நகராட்சியின் பொறியாளரான குணசேகர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.