Categories
தேசிய செய்திகள்

இது வீரியமான கொரோனா…! இங்கேயும் வந்துடுச்சு…. இந்தியாவுக்கு புது சிக்கல் …!!

பிரிட்டனில் பரவும் வீரியம் மிக்க கொரோனாவுக்கு, இந்தியாவிலும் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் மிகப்பெரும் பிரச்னையாக இருந்துவரும் நிலையில், தற்போது, வீரியத்துடன் புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள மற்றொரு வைரஸ் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது, பிரிட்டனில் வீரியம் மிக்க கொரோனா அதிவேகமாகப் பரவி வருகிறது.

இதனால், அங்கிருந்து வரும் விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே இந்தியா வந்துள்ள சிலரால் புதிய வகை கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து நாடு திரும்பியவர்களின் மாதிரிகள் சோதனைக்காக பல்வேறு சோதனை மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

இதில், பெங்களூரு சோதனை மையத்தில் சோதனை செய்யப்பட்ட 3 மாதிரிகளும், புனே சோதனை மையத்தில் 1 மாதிரியும், ஹைதராபாத் சோதனை மையத்தில் சோதனை செய்யப்பட்ட 2 மாதிரிகளுக்கும், வீரியம் மிக்க கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கண்காணிப்புப் பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |