Categories
உலக செய்திகள்

“இது வெறும் ட்ரெய்லர் தா”… கொரோனாவின் கொடிய அலை இனிமே தான்… பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

பிரிட்டனில் கொரோனாவின் கொடிய அலை இந்த வருடம் முழுவதும் இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டனில் வரும் மார்ச் 8 ஆம் தேதியிலிருந்து தேசிய ஊரடங்கு நான்கு கட்டங்களாக தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் விஞ்ஞானிகள் தரப்பிலிருந்து தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது விரைவான நடவடிக்கை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா தீவிரத்தின் மூன்றாம் அலைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்த மூன்றாவது அலையானது 2021 ஆம் வருடம் முடியும் வரை நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தொடங்கிய  கொரோனா தற்போது உச்சத்தை தொட்டது. இதேபோன்ற நிலைதான் இந்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து ஏற்படபோகிறது.

எனவே பிரிட்டனில் 30,000 முதல் 80,000 வரையிலான உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் தடுப்பூசி வழங்கும் திட்டம் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வந்தாலும் கொரோனாவின் கொடிய அலையின் அச்சுறுத்தல் மிகுந்த வருத்தமளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் 100% குணப்படுத்தாது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அதில் சிலர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் கவனிக்க தக்கது என்று கூறியுள்ளார்கள்

Categories

Tech |