Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல் ஆஃபர்!…. காசு இல்லாம சுற்றுலா போகலாம்….. எப்படின்னு நீங்களே பாருங்க?…..!!!!

பல்வேறு வகையான பொருட்களை வாங்க மற்றும் சேவைகளை பயன்படுத்த என பலவற்றுக்கும் கடன் வழங்கக்கூடிய வங்கிகளும், நிறுவனங்களும் இருக்கிறது. பெர்சனல் லோன், ஹோம்லோன் என்ற கடன்கள் தவிர வீட்டு உபயோகப்பொருட்களுக்கு கடன் வழங்கும் திட்டங்களும் இருக்கின்றன. இதையடுத்து கைமாற்றாக சிறிய தொகையை “பே லேட்டர்” என்று சில சிறிய நிதி நிறுவனங்கள் வழங்கி வருகிறது. ஒருமாதம் முதல் 3 மாதம் வரை என குறிப்பிட்ட காலஅளவில் இந்த பே லேட்டர் சேவைகள் நிதிஉதவி அளிக்கிறது. இப்போது பயணம் மேற்கொள்வதற்கு குறுகிய கால கடன் வழங்கும் நிறுவனங்கள் காணப்படுகிறது.

அந்த வகையில் travelnow, paylater என்று பணம் செலுத்தாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்பதை டூரிசம் சேவைகள் வழங்கும் நிறுவனங்களே விளம்பரப்படுத்தி வருகிறது. கடைசி நிமிடத்தில் பணமின்றி சுற்றுலா போக முடியாமல் தவிக்கும் நபர்களுக்கு இந்த இறுதிநிமிட நிதி உதவி, உண்மையில் உதவியாக இருக்குமா என தெரியவில்லை. இதுகுறித்த முழு விபரங்களை இங்கே பார்க்கலாம். இந்தியாவில் உலகளவில் என்று பல்வேறு வகையான பெரிய டிராவல் நிறுவனங்கள் இருக்கின்றன. அவை உங்களுக்கான பயணத்திட்டத்தை வடிவமைப்பது முதல், வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து வீட்டுக்கு திரும்புவது வரை அனைத்து விதமான பயணத் தேவைகளை பேக்கேஜாக வழங்குகிறது.

இந்தநிலையில் மேக் மை டிரிப் மற்றும் எக்ஸ்பீடியா ஆகிய பயண நிறுவனங்கள் தற்போது வங்கிகள், பேமெண்ட் தளங்கள், நிதி நிறுவனங்கள் போன்று pay laterசேவையைத் தொடங்கியுள்ளது. இச்சேவையைப் பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தாமல் உங்கள் பயணத்தை முன்பதிவு செய்துகொள்ள முடியும். அதாவது அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இகாமர்ஸ்நிறுவனங்கள் வழங்கும் பேலேட்டர் சேவைகளைப் போன்றே இதுவும் ஒரு டிஜிட்டல் கடனாகும். வெக்கேஷன் நவ்-பே லேட்டர் எனும் இந்த சேவை நான்-பேங்கிங் ஃபைனான்ஸ் கம்பெனி வாயிலாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கடன் பெறுவோர், வழங்கப்படும் கடனுக்கு 13 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலும் வட்டியானது வசூலிக்கப்படுகிறது.

கடன் தொகைக்கு ஏற்றபடி கடன் திருப்பிச் செலுத்தும் காலம் அமைக்கப்படும். அத்துடன் அதிகபட்சமாக 18 மாதங்கள்வரை கடன் செலுத்தலாம். மாதாந்திர ஈஎம்ஐ வாயிலாக நீங்கள் பயணத்துக்கான தொகையை திருப்பி செலுத்தலாம். நீங்கள் எப்போது புக்கிங் செய்தீர்களோ அம்மாதத்தின், அடுத்த மாதம் முதல் மாதாந்திர தவணை செலுத்த வேண்டும். அதன்படி இதை நீங்கள் ஒரு கடனாக பெறாமல், அதை பயணத்திற்கான புக்கிங் வாயிலாக, புக்கிங் செய்தபின் பதிவு செய்த அடுத்த மாதத்திலிருந்து மாதம் மாதம் சுற்றுலாவுக்கான தொகையை செலுத்தலாம்.

இம்மாதம் உங்களிடம் சுற்றுலாவுக்கு முன் பதிவு செய்ய பணம் இல்லை எனில் நீங்கள் பணமில்லாமல் இந்த சேவைகளை பயன்படுத்தி முன்பதிவு செய்து சுற்றுலா சென்று வரலாம். அதன்பின் அடுத்த மாதம் முதல் மாதாந்திர தவணையாக நீங்கள் செலவுசெய்த தொகைக்கு உரிய தொகையை மாதம் மாதம் செலுத்தி வரலாம். இதன் வாயிலாக கையில் பணமில்லை என்றாலும் கூட பயணம் மேற்கொள்ளலாம். ஒருசில பயணச்சேவை நிறுவனங்களானது பயணம்மேற்கொண்ட தொகையினை 15 தினங்களுக்குள் திருப்பிச்செலுத்தினால், கடனை வட்டி இல்லாமல் செலுத்த அனுமதிக்கிறது. மாதம்மாதம் தவணையை செலுத்த தவறி விட்டால் 2 -3 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

Categories

Tech |