Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்…. ஆர்யாவின் கேப்டன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து கேப்டன் என்ற படத்தில் நடிகர் ஆர்யா நடித்து வருகிறார். டெடி படத்திற்கு பின்னர் ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால் இந்த படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கேப்டன் திரைப்படத்தை திக் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஆர்யாவை தவிர சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேப்டன் படத்திற்கு டி இமான் இசையமைக்க கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். இவா ஒளிப்பதிவு செய்ய பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Categories

Tech |