பீகார் மாநிலம் பெகுசார் மாவட்டத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பாப்ளி குமாரி,குடும்ப பொறுப்புகளையும் பார்த்துக்கொண்டு போட்டி தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பயிற்சி மையத்திற்கு செல்வதற்கு முன்பு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இது தொடர்பாக அவர் பேசுகையில், குடும்பத்தின் மூத்த பெண்ணான நான் நிறைய பொறுப்புகளை எடுத்துக் கொண்டேன்.
அதனால் அரசு வேலை வேண்டுமென முயற்சித்தேன். 2015 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தேன். அதன் பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தேன்.அப்படி எனது மூன்றாவது முயற்சியில் நான் வெற்றி பெற்றேன் என அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.