Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல் போங்க!…. 150 கி.மீ சைக்கிளில் பயணித்து…. காதலியை கரம் பிடித்த நபர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

குஜராத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியியலாளராக பணிபுரிந்து வரும் சிவசூர்யா (28) சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இதேபோல் குஜராத்தின் ஆமதாபாத்தில் மென் பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வருபவர் அஞ்சனா. இவர் கேரளா கண்ணூரை சேர்ந்த சத்யன் என்பவரின் மகள் ஆவார். இதில் சிவசூர்யா மற்றும் அஞ்சனா ஆகியோர் இடையே 2 வருடங்களாக நட்பு பழக்கம் இருந்துள்ளது. தற்போது இந்த நட்பு திருமணத்தில் முடிந்திருக்கிறது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவரான சிவசூர்யா உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை இந்தியா உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அத்துடன் இவர்களுக்கு குருவாயூர் கோயிலில் திருமணம் செய்வது என முடிவாகி அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.

திருமணத்துக்கு தயாரான சிவசூர்யா கோவையிலிருந்து குருவாயூர் வரை 150 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று, அஞ்சனாவை கரம்பிடிக்க முடிவுசெய்துள்ளார். அதன்படி தன் 5 நண்பர்களுடன் அவர் சைக்கிளில் புறப்பட்டார். திருமணத்துக்குகான பயணம் கோயம்புத்தூரிலிருந்து குருவாயூர் என்ற வாசகம் அடங்கிய பதாகையை சுமந்தபடி அவர்கள் சென்றனர்.

அதன்பின் சிவசூர்யா மற்றும் அஞ்சனாவின் திருமணம் கோலாகலமுடன் நேற்று நடைபெற்று முடிந்தது. அவர்களுக்கு உறவினர்கள் வாழ்த்து கூறினார். அதனை தொடர்ந்து  சிவசூர்யா மீண்டும் தன் சைக்கிளில் கோவை நோக்கி புறப்பட்டார். அப்போது அவரை மணமகள் வீட்டார் காரில் பின் தொடர்ந்தனர். இதுகுறித்து முன்பே மணமகள் குடும்பத்தினரிடம் சிவசூர்யா எடுத்துக்கூறி அதற்கு சம்மதமும் வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |