ரஜினியின் படத்தை தொடர்ந்து நெல்சன் அடுத்த படத்தின் கதையை எழுத ஆரம்பித்து விட்டாராம்.
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான நெல்சன் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றார். டாக்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பை எப்படிப்பெற்றாரோ அதுபோலவே விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன். இந்நிலையில் விஜய்- நெல்சன் கூட்டணியான பீஸ்ட் திரைப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது.
ரஜினி-நெல்சன் இணையும் கூட்டணி பற்றி சென்ற பிப்ரவரி மாதம் தகவல் வெளியானது. இந்நிலையில் பீஸ்ட் படம் ரிலீஸான பிறகு ரஜினியின் 169வது திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லியிருப்பதால் படப்பிடிப்பு துவங்க சிறிது காலதாமதம் ஆகும் என தகவல் வந்துள்ளது. இதனால் நெல்சன் அதுவரைக்கும் சும்மாயிருக்க முடியாது என அடுத்த படத்தின் கதையை எழுத ஆரம்பித்து விட்டாராம். மேலும் ரஜினி வருவதற்குள் அந்த கதையை எழுதி முடித்து விடுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.