Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இது வைகை ஆறா?…. அல்லது சாக்கடை கால்வாயா?…. பகிரங்கமாக கலக்கப்படும் கழிவுநீர்…. மக்கள் வருத்தம்….!!!!

வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரால் ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது.

மேகமலையில் தவழ்ந்து, கம்பம் பள்ளத்தாக்கை தாண்டி, வருசநாடு குன்றுகளை கடந்து மதுரையில் மகிழ்ச்சியாய் பாய்ந்து வரும் ஆறு வைகை. மதுரையை செழிக்க வைத்த வைகைக்கு கைமாறாக கடைக்கோடி வரை கலக்கப்படுவது அனைத்தும் கழிவு நீ.ர் ஒரு காலத்தில் வைகை ஆற்றங்கரை எல்லாம் நிரம்பி இருந்த மணல் அனைத்தும் எடுக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனது. வைகை ஆறும் வறுமையில் வாடியது.

விளை நிலங்கள் அனைத்தும் வீடு, மனைகள் ஆகியது. வயல்வெளிகள் வறண்டு விட்டன. பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் எஞ்சியுள்ள வைகை ஆற்றை பாதுகாக்க பொதுப்பணித்துறை கடைக்கண் கூட காட்டவில்லை. வைகை ஆற்றில் தொடர்ந்து கலக்கப்பட்டு வரும் மாசு நீரால் துர்நாற்றம் வீசி வருகின்றது. செல்லூர் பந்தல் குடி கால்வாயில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகமான கழிவு நீர் சுத்திகரிக்க முடியாததால் வைகை ஆற்றில் பகிரங்கமாக திறந்து விடப்படுகின்றது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இருந்தும் வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீர் காரணமாக ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது. இது மக்களை மிகுந்த வேதனை அடைய செய்துள்ளது.

Categories

Tech |